The IndUS Network e-magazine

Showers/Rain Tamil Poem Picks
Poems

வள்ளுவரின் வாய்மொழியில் மழை ...
புலவர் மா.சடையான்டி

மழையின்றி பூமியில் உயிர்கள் இல்லை
மரம் செடிகள் புல்பூண்டு வளர்வதில்லை
உழைக்கின்ற உழவர்க்கும் தொழில்கள் இல்லை
உணவுக்கும் நீருக்கும் வழியும் இல்லை
பிழைபதற்கு வழியேதும் தெரிவ தில்லை
பூசனைகள் கடவுளுக்கு நடப்ப தில்லை
கலைகளிலும் களிப்பினிலும் நாட்ட மில்லை
காணுகின்ற இடமெங்கும் கானல் நீரே !


குடைக்குள் மழை..
க.பாண்டியராஜன்

பருவம் தவறி வந்த
மழையினால்
மூழ்கிய பயிரைக்
குடைக்குள் நின்றபடி
கண்டு வடிக்கும்
விவசாயின்
கண்ணீரைத் தான்
குடைக்குள் மழை
என்பதோ?