The IndUS Network e-magazine

June Tamil Poem Picks
Poems

அம்மாவும் ... அப்பாவும் ...
நவீன் ப்ரகாஷ்
You can read more of Naveen Prakash's poems
at his blog http://naveenprakash.blogspot.com/.

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...


அப்பா ...
நவீன் ப்ரகாஷ்

முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...
---------------------------------------------------------
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


தந்தைக்கு ஒரு மகளின் கவிதை ...

அப்பா ...
இரண்டு வயதில் என்னை நடக்க வைத்தாய்
ஆறு வயதில் என் கை பிடித்து எழுத வைத்தாய்
நாளும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர
நர் கணிதமும் அறிவியலும் பயில பணிதருல்ந்தாய்
நான் துவழும்போது தூண்டுகோலாய் சுடர் கொடுத்தாய்
செல்வத்துள் சிறந்த கல்வி செல்வத்தை எமக்களித்தாய்
கலைகளில் சிறந்த கலையை பயில வைத்தாய்
ஒரு ஆணின் கல்வி அவனுக்கு சொந்தம் ஆனால்
ஒரு பெண்ணின் கல்வி அவள் சந்ததியினரை சாரும்
என அறிய வைத்தாய்
விண்கண்ட தெய்வம் பலகோடி உண்டேனும்
என் கண்கண்ட தெய்வம் நீங்கள்தானே!


மகிழ்ச்சி ...
க.பாண்டியராஜன்

தீபாவளிக்கு
மத்தாப்புக்களையும், வெடிகளையும்
கொளுத்தி மகிழ்ந்த
தன் குழந்தைகளின் முகத்தைப் பார்த்து
தந்தை மறந்தான்
தான் கந்து வட்டிக்கு
வாங்கிய கடனை !


தந்தை
புலவர் மா.சடையான்டி

தந்தை சொல்லே மந்திர மாகும்
தாயே சிறந்ததோர் கோயிலு மாகும்
மூத்தார் மொழிகளே வேதங்கள் ஆகும்
முயற்சியே வெற்றியின் படிக்கல் ஆகும்
பண்புடன் அன்பும் பாசமும் தோய்த்து
பரிவுடன் ஒழுக்கமும் அறிவையும் கூட்டி
நன்மகன் இவன் என நானிலம் போற்ற
சான்றோன் ஆக்குதல் தந்தை கடனாம்