The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

புன்னகை ...
புலவர் மா.சடையான்டி

புன்னகையே வாழ்க்கைதனை
வளமாக்கத் துணையாகும்
எண்ணத்தின் ஓட்டத்தை
அறிவிக்கும் மணியாகும்

மழலையரின் புன்னகைக்கு
மண்ணுலகே விலையாகும்
புகழ்கின்ற சொற்களுக்கு
புன்னகையே பதிலாகும்

பகையினையும் நட்பாக்கும்
புன்னகையின் பண்பாகும்
துன்பத்தை துடைக்கின்ற
ஆற்றல்மிகு மருந்தாகும்

புன்னகையால் இவ்வுலகை
வென்றிடலாம் வாருங்கள்
இன்புறவே புன்னகையே
இதயத்தில் ஏற்றுங்கள்



பொக்கை வாய்

ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒண்ணை புரிய வைக்க நினைச்சாரு. எல்லாரையும் கூப்புட்டு உக்கார வச்சு, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காமிச்சாரு. அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டாரு.

ஒரே ஒரு சீடனுக்கு மட்டும் ஒண்ணுமே புரியலை. வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்தி்டப்போகுதுனு குழம்பினவன், மெதுவா குருவையே எழுப்பி கேட்டான்.

அவர் கேட்டார்..

'என் வாய்குள்ள என்ன இருந்தது?'

'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'

'பல் இருந்ததா?'

'இல்லை.'

'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'


பூமியின் புன்னகை ...
க.பாண்டியராஜன்

பூமியும்
புன்னகை பூக்கும்
குளோபல் வார்மிங் ஐ
கட்டுபடுத்தப்படும்போது