The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

நம்பிக்கை வேண்டும் ...

வெற்றிக்கு மனதினில்
நம்பிக்கை வேண்டும்
விருப்புடன் அறிவோடு
துணிச்சலும் வேண்டும்
கனவுகள் யாவையும்
நனவாக வேண்டும்
காரியம் வென்றிட
உழைத்திடல் வேண்டும்
ஒற்றுமை போற்றிடும்
உள்ளமும் வேண்டும்
உயர்வான சிந்தனை
உருவாக வேண்டும்
ஆற்றலை ஒருமுக
படுத்திடல் வேண்டும்
அகிலத்தில் புகழுடன்
வலம்வர வேண்டும்


Experienced man ...
தோல்விகள் பலகண்டும்
சாதனைகளை நோக்கி
பயணிப்பவன் பெயர்தான்
experienced man ஒ


பரமபத விளையாட்டு ...
விடாமுயற்சியுடன்
விளையாடுவதுதான்
பரமபத விளையாட்டு