The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

 

ஹலோ சொல்லுவோம்

அன்பதனை வெளிப்படுத்த
ஹலோ சொல்லுவோம்

அகமகிழ்வைக் காட்டுவதற்க்கு
ஹலோ சொல்லுவோம்

நண்பர்களைக் காணும்போது
ஹலோ சொல்லுவோம்

நல்லுறவை பேணுதற்கு
ஹலோ சொல்லுவோம்

நல்லார்க்கும் பொல்லார்க்கும்
ஹலோ சொல்லுவோம்

நானிலமும் அமைதிபெற
ஹலோ சொல்லுவோம்

எல்லார்க்கும் மகிழ்ச்சியுற
ஹலோ சொல்லுவோம்

இவ்வுலகம் ஒன்றுபட
ஹலோ சொல்லுவோம்