The IndUS Network e-magazine

May Tamil Poem Picks
Poems

வண்ண வண்ண பூக்கள் ...
க.பாண்டியராஜன்

விதவிதமான
வண்ண வண்ண பூக்களை
சாலை ஓரத்தில்
விற்று கொண்டிருந்தாள்
விதவை பெண்மணி !


அன்னை
புலவர் மா.சடையான்டி

அன்னையரே முன்னறியும் தெய்வமாகும்
அகிலத்தின் முதற்பொருளே அன்னையாகும்
கண்மணிபோல் காத்தவளும் அன்னையாகும்
காசினியில் அவளுக்கினை அவளேயாகும்
தன்னலமே இல்லாத உள்ளமாகும்
தன்னுயிரைக் கொடுக்கின்ற இதயமாகும்
அன்புக்கும் அருளுக்கும் சாட்சியாகும்
ஆண்டவனின் மறுவுருவம் அன்னையாகும்


கோயில் .
க.பாண்டியராஜன்

தான் மட்டுமே செலவு செய்து
கட்டி முடித்த
கோயிலின்
குடமுழுக்கு விழாவிற்கு
மறவாமல்
தன் தாயையும் அழைத்து சென்றான்
முதியோர் இல்லத்திலிருந்து !


வைரமுத்துவின் கவிதை தொகுப்பிலிருந்து ...
அன்னையை பற்றி ..

வித்தியாசமான கருத்து

எனக்கொன்னு ஆனதுன உனக்கு வேர பிள்ளையுண்டு . .
உனக்கொன்னு ஆனதுன எனக்கு வேர தாயிருக்கா . .?!"