The IndUS Network e-magazine
Entertainment, Edutainment, Enrichment ™
 

Tamil Poem Picks
Poems


Image credit: lovenewyear.lowitsomuch.com


புத்தாண்டே வருக!

புத்தாண்டே வருக!
புதுவாழ்வு பொழிக !
முத்தமிழின் சுவைபோல
மூவுலகும் மகிழ்க
திங்கள்மும் மாரியினால்
திக்கெட்டும் செழிக்க !
இவ்வுலக மக்களெல்லாம்
இசையோடு வாழ்க !

அன்பையே இதயத்தில்
அரணாகக் கொள்க !
இன்புற்று எல்லாரும்
நோயற்று வாழ்க !
நாடெல்லாம் நலமோடு
வளமோடு வளர்க !
நம்பிக்கை உள்ளத்தில்
நாளெல்லாம் மலர்க !