The IndUS Network e-magazine
Entertainment, Edutainment, Enrichment ™
 

Tamil Poem Picks
Poems


Image credit: www.psmag.com


இணைய தளம்

இவ்வுலகம் பாராட்டும் இணையதளம்
எண்ணில்லா சிறப்புகளால் இணைந்த தளம்
நன்மைகளும் தீமைகளும் கலந்த தளம்
நாம் விரும்பும் கருத்தெல்லாம் வழங்கும் தளம்
இவ்வுலகை இணைத்திட்ட இணைய தளம்
எல்லோரும் விரும்புகின்ற இணைய தளம்
சொல் வளமும் பொருள் வளமும் காட்டும் தளம்
சிறுவர்களும் மகிழ்ந்தாடும் சிறந்த தளம்

கருத்துக்களின் பெட்டகமாய் விளங்கும் தளம்
காலத்தை வெல்லும் வழி காட்டும் தளம்
கற்பிக்கும் ஆசானாய் திகழும் தளம்
கற்போர்க்கு துணையாக உதவும் தளம்
அற்புதங்கள் நிறைந்திட்ட சிறந்த தளம்
அகிலத்தை சுருக்கிட்ட அறிய தளம்
பயணிகளின் பயணத்திற் குதவும் தளம்
பாருக்கே பயனாகும் இணைய தளம்