The IndUS Network e-magazine
Entertainment, Edutainment, Enrichment ™
 

Tamil Poem Picks
Poems


Image credit:www.greatthoughttreasury.com


புகழ்

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

Meaning:
If you are born (in this world), be born with qualities conductive to fame
From those who are destitute of them it will be better not to be born


பேர் வாங்குவோம்

நாவன்மை மிக்கவர்கள் பேருவாங்கலாம்
நாட்டுக்காக வாழ்ந்தவர்கள் பேருவாங்கலாம்
நல்லவர்கள் வல்லவர்கள் பேருவாங்கலாம்
நற்கருணை மிக்கவர்கள் பேருவாங்கலாம்
வள்ளல்மை படைத்தவர்கள் பேருவாங்கலாம்
வாழ்வாங்கு வாழ்பவர்கள் பேருவாங்கலாம்
செயற்கரிய செய்பவர்கள் பேருவாங்கலாம்
செயல்திறன் மிக்கவர்கள் பேருவாங்கலாம்

உண்மையை உரைப்பவர்கள் பேருவாங்கலாம்
உழைப்பாலே உயர்ந்தவர்கள் பேருவாங்கலாம்
அன்புள்ளம் கொண்டவர்கள் பேருவாங்கலாம்
அறிவாலே சிறந்தவர்கள் பேருவாங்கலாம்
கற்பனையில் மிக்கவர்கள் பேருவாங்கலாம்
காவியங்கள் படைத்தவர்கள் பேருவாங்கலாம்
அயராது உழைப்பவர்கள் பேருவாங்கலாம்
அஞ்சாமை மிக்கவர்கள் பேருவாங்கலாம்