The IndUS Network e-magazine
Entertainment, Edutainment, Enrichment ™
 

Tamil Poem Picks
Poems


Image credit: www.net4surf.com


பொலிக புத்தாண்டு

புத்தாண்டில் இவ்வுலகம் புதுவாழ்வு பெறவேண்டும்
பூவுலகம் யாங்கணுமே மும்மாரி பெற வேண்டும்

முத்தமிழின் சிறப்பினைப்போல் மாட்சிமைகள் பெற வேண்டும்
மூவுலகும் போரின்றி அமைதிவழி செல்ல வேண்டும்

எல்லோரும் இன்புற்று எழில் வாழ்வு பெற வேண்டும்
இல்லாமை இல்லாத நல்வாழ்வு பெற வேண்டும்

அன்பென்ணும் வழிதனிலே அறம் போற்றி செல்ல வேண்டும்
அகிலமெல்லாம் மானிடமே பெருவெற்றி பெற வேண்டும்