The IndUS Network e-magazine
Entertainment, Edutainment, Enrichment ™
 

Tamil Poem Picks
Poems


Image credit: www.itsoffishial.com


பயனில்லை

துன்பத்தில் துணைநில்லா நண்பர்களால் பயனில்லை
தூயமன மில்லாத சுற்றத்தால் பயனில்லை
அன்பில்லா மனையாளை அடைந்ததனால் பயனில்லை
அறிவில்லா பணியாட்கள் அருகிருந்தும் பயனில்லை
பண்பில்லா மக்களிடம் பொருளிருந்தும் பயனில்லை
பாசமில்லாப் பிள்ளைகளைப் பெற்றிருந்தும் பயனில்லை
இன்பத்தை வளர்க்காத பிள்ளைகளால் பயனில்லை
இகமீதிய புகழில்லா வாழ்க்கையினால் பயனில்லை

ஒழுக்கத்தை வளர்க்காத கல்வியினால் பயனில்லை
ஒற்றுமையை உணர்த்தாத நூல்களால் பயனில்லை
முறைசெய்து காக்காத ஆட்சியினால் பயனில்லை
மூவாசை துறக்காத துறவிகளால் பயனில்லை
நன்னெறியை வளர்க்காத சமயத்தால் பயனில்லை
நம்பிக்கை இல்லாத வாழ்க்கையினால் பயனில்லை
தன்னலம் பேணுகின்ற தலைவர்களால் பயனில்லை
தகுதியில்லா மாந்தருடன் பழகுதல் பயனில்லை