The IndUS Network e-magazine
Entertainment, Edutainment, Enrichment ™
 

Tamil Poem Picks
Poems


Image credit: www.eft.com


இச்சவாலையும் வெல்லும்!

ரூபாயின் மதிப்பை உலக பொருளாதாரம் குறைத்தது
ருபாய் இன்று இளைத்துப் போனது.

விலையின் உயர்வு விண்ணைத் தொட்டது
வேதனை மக்கள் இதயம் நிறைத்தது

இந்திய பொருளா தாரம் வீழ்ச்சி கண்டது
அறிஞர்கள் திட்டம் கேள்வி குறியானது

பாரத தேசம் பொருளாதார நிலை பெருமா ?
கேள்வி கணைகள் எங்கும் எழுகிறது

நூறு கோடி மக்களின் ஆற்றல்
பாரத மண்ணை எழுந்திடச் செய்யும்.

தடைகளை தாண்டி பாரதம் வெல்லும்
இந்தியா ஒருநாள் இச்சவாலையும் வெல்லும்!