The IndUS Network e-magazine
Entertainment, Edutainment, Enrichment ™
 

Tamil Poem Picks
Poems


Image credit: bakkenenbeauty.blogspot.com


இனிய சுவை

சுவைகளிலே சிறந்தசுவை நகையின் சுவை
துன்பத்தை மறக்கச்செய்யும் இனிய சுவை
அவையோரை ஈர்க்கின்ற சிறந்த சுவை
அனைவரையும் மகிழ்விக்கும் உயர்ந்த சுவை
இனையோரும் முதியோரும் ஏற்கும் சுவை
இன்பத்தை கூட்டுவிக்கும் இனிய சுவை
உழைக்கின்ற மக்களுக்கு உகந்த சுவை
உலகாரை வாழ்விக்க உதித்த சுவை