The IndUS Network e-magazine
Entertainment, Edutainment, Enrichment ™
 

Tamil Poem Picks
Poems


Image credit: www.boltonpublicschools.com


விளையாட்டில் பந்தயங்கள்

விளையாட்டில் பந்தயங்கள்
வினையாகி விட்டனவே!
களிப்பூட்டும் விளையாட்டு
கலகத்தை விளைத்தனவே !
விளையாட்டு வீரர்களை
விலைபோகச் செய்தனவே !
வெற்றியையும் தோல்வியையும்
வெள்ளிப்பணம் செய்தனவே !

போராடும் வீரர்களின்
போக்குகளை மாற்றினவே !
சூதாட்டம் விளையாட்டில்
பேயாட்டம் ஆடினவே !
கோடானு கோடிமக்கள்
கோபத்தைத் தூண்டினவே !
விளையாட்டு வீரர்களை
சிறைச்சாலை வென்றனவே !
வீரர்களின் தடுமாற்றம்
ரசிகர்களின் ஏமாற்றம் !