The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

நகைச்சுவை

Image credit:onecentatatime.com

சுவையில்லா வாழ்க்கையிலே சிறப்பு இல்லை
நகையில்லா பேச்சினிலே இனிமை இல்லை

நகைச்சுவைக்கு ஈடான சுவைகள் இல்லை
நானிலமும் இக்கருத்தை மறுப்பதில்லை

பகைவரையும் நட்பாக மாற்றிக் காட்டும்
பாசத்தை வளர்க்கின்ற சக்தி கூட்டும்

அமைதியையும் அறிவினையும் மலரச் செய்யும்
அனைவரையும் மகிழ்ச்சியிலே திளைக்கச் செய்யும்


புன்னகைப்பூ

யார் என்ன நகைச்சுவை சொன்னார்கள்?
யார் கோடி ரூபாய் கொட்டிக்கொடுததார்கள்?
இப்படி ரோஜா மொட்டு போன்ற இதழ் அசைத்து அழகாய்
புன்னகை பூக்கிறதே?

இனிய கனவு காண்கிறதாம் தொட்டில் குழந்தை !!