The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

பூக்கள்

Image credit:kathalkavithai.blogspot.com

காயம்

உன்னை காயபடுத்த வேண்டும் என்பதில்
எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை
ஆனால் உன்னை காயபடுத்தா விட்டால்
எனக்கு வேறு அடைக்கலம் இல்லை

இப்படிக்கு
மரங்கொத்தி

Author: Prem @ jilljuck.com

அன்பு

அன்பில்லார் எல்லாம் தமக்கு என்பார்
அன்புடையார் என்றும் பிறர்க்கு என்பார்
வற்றல் மரம் கூட ஒருவேளை தளிர்க்கலாம்
அன்பிலார் வாழ்க்கை வழமை அடையாது
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாளென்று
எங்கள் வள்ளுவர் இயம்பிச் சென்றனன்

அன்பின் சிறப்பை அகிலம் மறந்தது
தன்னவப் பிடியில் சிக்கித் தவித்தது
கள்ளம் கபடம் கயமை சூது
எங்கும் வன்முறை எதிலும் சூழ்ச்சி
அன்பின் ஊற்று அற்றுப் போனது
அன்பிலா உலகம் அமைதி இழந்தது

அன்பின் சிறப்பை அகிலம் உணர்த்திய
அண்ணல் காந்தி ,ஏசு ,புத்தர்,
அன்னை தெரசா ,அருமை நபிகள்
என்று மறப்பர் இன்னல் நீக்கிட