The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

தீபாவளி


Image credit:religiousfacts.com

 

தீபத்தின் வழிபாடே தீபாவளி
தெய்வத்தின் மெய்வடிவே ஜோதியாகும்

ஆபத்தைப் போக்குவதும் தெய்வமாகும்
அற்புதங்கள் நிகழ்த்துவதும் இறைவனாகும்

தீயவரை அழித்திடவே அவதரித்தான்
திக்கற்ற மக்களுக்கு அருள்புரிந்தான்

ஒளியில்லா இடங்களிலே இருளிருக்கும்
இறைவாழும் இடங்களிலே அருளிருக்கும்