The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

வெற்றி காண்போம்

Nike: Goddess of Victory
Image credit:thanasis.com

 

இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இருக்கும்வரை எல்லார்க்கும் நலம் செய்தல் வேண்டும்

பெருமைக்கும் புகழுக்கும் தொண்டாற்றல் வேண்டும்
பேரளத்தின் துணையோடு வாழ்ந்திடுதல் வேண்டும்

பொருளோடும் அருளோடும் புகழ்படைத்தல் வேண்டும்
புகல்படைத்தோர் துணையோடு நடைபயில வேண்டும்

அறிவோடும் துணிவோடும் செயலாற்ற வேண்டும்
அகிலமே போற்றும்படி உயர்வடைதல் வேண்டும்