The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

ரோஜா மலரே !

Image credit:www.squidoo.com
A rose hidden in an egg jewel.

ரோஜா மலரே !
மலர்கழின் ராஜாவே!

உன் ராஜ்யத்தில்
அன்பின் ஆட்சி நடக்கிறது
அமைதி! எங்கும் அமைதி!
மகிழ்ச்சி! எங்கும் மகிழ்ச்சி!

உன் ராஜ்யத்தில்
பொறமை இல்லை - அதனால்
போட்டி இல்லை.
விருப்பில்லை - அதனால்
வேதனை இல்லை.
உயர்வென்றும் தாழ்வென்றும்
பேதமும் இல்லை.

பிறருற்காக வாழ்வதில்
பேரின்பம் காண்பவர்கள் நீங்கள்.
சுயநலம் என்பதை
நினைத்து பார்க்காதவர்கள் நீங்கள்

உங்கள் வாழ்கையில்
வாட்டமில்லை வருத்தமில்லை
இயற்கை அன்னையின் கோயிலில்
நீங்கள் தூண்டா ஒளி விளக்கு

உங்கள் அழகை ஆராதிக்கிறேன்
உங்கள் வாழ்வை நேசிக்கிறேன்