The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

அதிசயம்


Image credit:helpothers.org

நடக்காதவை நடந்துவிட்டால் அதிசயம்
நல்லவர்கள் வீழ்ந்துவிட்டால் அதிசயம்
இறந்தவர்கள் எழுந்துவிட்டால் அதிசயம்
இளமையிலே முதுமை பெற்றால் அதிசயம்
ஊமையர்கள் பேசிவிட்டால் அதிசயம்
ஊனமுற்றோர் நடைபயின்றால் அதிசயம்
உலகமெல்லாம் ஒன்றுபட்டால் அதிசயம்
உத்தமர்கள் போற்றப்பட்டால் அதிசயம்

மானிடர்கள் தெய்வமானால் அதிசயம்
மண்னவர்கள் துறவியானால் அதிசயம்
மண்ணுலகம் அமைதிபெற்றால் அதிசயம்
மாதமும் மாரிபெய்தால் அதிசயம்
காந்திமகான் பிறந்து வந்தால் அதிசயம்
கருணையுடன் தொண்டு செய்தால் அதிசயம்
அரசியலில் நேர்மைபேற்றால் அதிசயம்
அன்புவழி கடைபிடித்தால் அதிசயம்


புதுமை

புத்தாண்டு வந்தால் புதுமை பிறக்குமாம்
--யோசித்து பார்த்தால்
நம்மோடு இருப்பவர்கள் எல்லாம் பழையவர்கள்;
பழைய சூரியன், பழைய சந்திரன், பழைய ஆகாயம், பழைய பூமி
இவர்களோடு
பழைய நண்பர்கள் மற்றும் பழைய வழக்கங்கள்!
பின் எப்படி?
நம் சிந்தனையிலும் செயல்களிலும் புதுமையை புகுத்தலாமே?