The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

 

பெண்

Image credit:unknown

சாதனை செய்வதற்கும் - வாழ்வில்
சரித்திரம் படைபதற்கும்
வேதனை தீர்ப்பதற்கும் - செயலில்
வெற்றிகள் காண்பதற்கும்
ஈதலில் சிறப்பதற்கும் - என்றும்
இசையுடன் வாழ்வதற்கும்
காதலில் மகிழ்வதற்கும் - நல்ல
கருத்துக்கள் முகிழ்ப்பதற்கும்
மாதர்கள் துணை வேண்டும் - இதை
மறந்திடல் முறையாகுமோ?

அன்பினை பெறுவதற்கும் - நல்ல
அறிவினை வளர்பதற்கும்
பண்பினில் சிறப்பதற்கும் - நெஞ்சில்
பிரிவினைப் பதிப்பதற்கும்
உண்மையை போற்றுதற்கும்
உழைப்பினால் உயர்வதற்கும்
எண்ணங்கள் மலர்வதற்கும் - வாழ்வில்
ஏற்றங்கள் அடைவதற்கும்
பெண்களின் துணையின்றி - உலகில்
பெற்றிட வழியுமுண்டோ ?