The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

இன்றைய விளையாட்டு வீரன்

Image credit:http://www.coloring-pages-kids.com/

இரண்டு மணிநேரம் விளையாடுவான்—
ஆனால் வேர்ப்பதில்லை.

எல்லா "கோலையும்" இவன் தான் போடுவான்—
கால் வலிப்பதில்லை.

பலநூறு "ரன்கள்" ஓடி ஓடி குவிப்பான்—
ஆனால் மூச்சு வாங்குவதில்லை.

எவ்வளவு பெரிய போட்டியானாலும் இவனுக்கு—
பயிற்சி தேவையில்லை.

எப்படியும் தினமும் ஒரு விளையாட்டாக விளையாடுவான்—
வெயிலோ மழையோ இவனுக்கு கவலையில்லை.


இவன் விளையாடி வென்று வீட்டிற்கு கோப்பைகள் கொண்டுவருவதில்லை.
ஆனாலும் மக்கள் கைதட்டிக் கொண்டே இருக்கிறார்கள் -
அறைக்குள்—

நம் "கணிணி விளையாட்டு” நாயகனின் வெற்றியைப்பார்த்து.