The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

நம்பிக்கை

Image credit:layoutsparks.com

நம்பிக்கை கொண்டவர்முன்
நாரணனே தோன்றிடுவான்
நம்பிக்கை உளத்திருந்தால்
நானிலமும் வசமாகும்
நம்பிக்கை உள்ளவர்க்கு
நாளெல்லாம் மகிழ்வாகும்
நம்பிக்கை வைபோர்க்கு
கனவெல்லாம் நனவாகும்

நம்பிக்கை வாழ்க்கைக்கு
நலம்பயக்கும் துணையாகும்
நம்பிக்கை மாந்தர்க்கு
நன்மைதரும் மருந்தாகும்
நம்பிக்கை வெற்றிக்கு
வழிகாட்டும் ஒளியாகும்
நம்பிக்கை கடவுளினால்
வழங்கிட்ட வரமாகும்


உறுதிமொழிக் கடிதம்


Image credit: reading-whisperer.com

பழமையை விரட்டிடுவோம்---
நண்பர்களையும், நினைவுகளையும் தவிர்த்து.

புதுமையைப் போற்றிடுவோம்---
நம் கலாச்சாரததையும், பாரம்பரியத்தையும் தவிர்க்காது.

நண்பர்களைத் தேர்ந்திடுவோம்---
கயவர்களையும், வேஷதாரிகளையும் தவிர்த்து.

பகைவர்களை வென்றிடுவோம்---
நியாயத்தையும், தர்மத்தையும் தவிர்க்காது.

உற்சாகததுடன் இயங்கிடுவோம்---
சோம்பலையும், மனச்சோர்வினையும் தவிர்த்து.

நேரத்தை மதித்திடுவோம்---
அன்றாடதேகப்பயிற்சிகளைத் தவிர்க்காது.

உறுதிமொழி எடுத்துவிட்டோம் நாங்கள் ---
புத்தாண்டே நிறைவேற்று !!