The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

வண்ணம்

Image credit:visualworshiper.com

வானவில்லில் காண்கின்ற அழகுமிகு வண்ணம்
வாழ்கின்ற மாந்தர்களின் மாறுபட்ட வண்ணம்

காசினியில் மலர்க்கூட்டம் கவர்ந்திழுக்கும் வண்ணம்
கணக்கில்லா மரங்களினம் தோற்றுவிக்கும் வண்ணம்

கவிபாடும் பறவைகளின் கண்கவரும் வண்ணம்
கானகத்தில் விலங்குகளின் களிப்பூட்டும் வண்ணம்

மாசில்லா மணிகளிலே மனங்கவரும் வண்ணம்
மாநிலத்தில் காண்கின்ற இடமெங்கும் வண்ணம்